ஜம்மு காஷ்மீரில் Operation Keller என்ற பெயரில் பதுங்கி இருக்கும் பாகிஸ்தான ் ஆதரவு பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றுவிட்டதாக மத்திய அரசும் ராணுவமும் அறிவித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் விமான படை தளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர்
Operation Keller என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் வனபகுதியில் பதுங்கி இருந்து நடமாடும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைதான் இந்த Operation Keller.
ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் இணைந்து மே 13-ந் தேதி Operation Keller நடவடிக்கையைத் தொடங்கினர். இந்த நடவடிக்கையில் தீவிரவாத இயக்கங்களின் தளபதி உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் இந்த 3 தீவிரவாதிகள். இவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தீவிரவாதிகளை அழித்தொழிப்போம் என ராணுவம் தெரிவித்துள்ளது.
Operation Keller என்பது என்ன?

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் Keller வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கை என்பதால் இதற்கு Operation Keller என பாதுகாப்புப் படையினர் பெயரிட்டனர்.
