சத்தீஸ்கர் Operation Black Forest : மாவோயிஸ்ட் இயக்க பொதுச் செயலாளர் பசவராஜூ உட்பட 27 பேர் சுட்டுக் கொலை- மோடி பெருமிதம்

Published On:

| By Minnambalam Desk

Top Maoist Leader Basavaraju Among 27 Killed in Encounter

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜூ உட்பட 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். Operation Black Forest Chhattisgarh Maoist Encounter

அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில், நக்சலிசத்தை (மாவோயிஸ்டுகள்) அழிக்கும் யுத்தத்தில் முக்கியமான வெற்றி கிடைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜூம் ஒருவர் என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பக்கத்தில், பாதுகாப்பு படையினர் இந்த வெற்றியால் பெருமிதப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மண்டல ஐஜி பி.சுந்தரராஜ் கூறுகையில், மாவோயிஸ்டுகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்துள்ளார். சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்றார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் Operation Black Forest என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிராவில் 54 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 84 பேர் சரணடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share