இறுதிக்கட்ட பரப்புரை : ரோடு ஷோவில் வாக்கு சேகரித்த பன்னீர்

Published On:

| By christopher

மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இறுதிக்கட்ட பரப்புரையாக ரோடு ஷோ நடத்தினார்.

அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான தொண்டர்களும் ரோடு ஷோவில் பங்கேற்று உற்சாகமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மேலும் அவரது மகனும், தேனி எம்.பியுமான ஓ.பி.ரவீந்திர நாத்தும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பலாப்பழச் சின்னத்தின் பதாகைகளை ஏந்தியபடி வாக்கு சேகரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” : அண்ணாமலை திட்டவட்டம்!

தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறாரா தேவா?… வெளியான சுவாரஸ்ய தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share