அரசு மரியாதையை மறுத்த உம்மன் சாண்டி…கேரளாவின் இன்னொரு முன்னுதாரணம்

By Minnambalam

|

Published on 20 Jul 2023, 11:10 AM

Ooman Chandy who refused to respect

பொதுவாக தலைவர்கள் யாரேனும் இறந்தால் அவர்களின் உடல் அரசின் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

ஆனால், மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் அரசு மரியாதையின்றி இன்று (ஜூலை 20) அடக்கம் செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடந்த ஜூலை 18 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்மயா மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன்  கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர், உம்மன் சாண்டியின் சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (ஜூலை 20) பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, இரண்டுமுறை முதல்வராகவும், மூன்று முறை அமைச்சராகவும், 53 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாகவும் இருந்த உம்மன் சாண்டியின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செய்யாதது ஏன் என்ற கேள்வி மக்களிடம் எழுந்தது.

ADVERTISEMENT

அதே சமயம் உம்மன் சாண்டியின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அறிவித்திருந்தார்.

ஆனால், அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கு தனக்கு வேண்டாம் என உம்மன் சாண்டி ஏற்கனவே கூறியிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Ooman Chandy who refused to respect

அரசு மரியாதை வேண்டாம் எனவும் மத அடிப்படையிலான சடங்குகளுடன் தனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும் எனவும் உம்மன் சாண்டி விரும்பியதாக அவரின் மனைவி மரியம்மா உம்மன் கூறியுள்ளார்.

அதநேரம் அவரது மகன், “ஒரு சாதாரண மனிதனாக பிறந்து, சாதாரண மனிதராக வாழ்ந்த ஒரு தலைவருக்கு மக்கள் வழங்கும் அன்பான ஆதரவை வழிநெடுக பார்த்தோம். அப்பாவின் ஆசைப்படி அவரது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்”என்று கூறியுள்ளார்.

Ooman Chandy who refused to respect

இதைத்தொடர்ந்து அரசு மரியாதை இல்லாமல் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மரியாதையை மறுத்த உம்மன் சாண்டி…கேரளாவின் இன்னொரு முன்னுதாரணமாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா: 100 வது டெஸ்ட்!

மணிப்பூரில் கொடூரம்: நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel