மருந்துச்சீட்டில் CAPITAL எழுத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (பிப்ரவரி 23) மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் தரும் மருந்துச் சீட்டுகளால் அவ்வப்போது சில குளறுபடிகள் நடைபெறும் நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை நேற்று மருத்துவர்களுக்கு மருந்துச்சீட்டில் எழுதுவது தொடர்பாக உத்தரவினை பிறப்பித்ததாக செய்தி வெளியானது.
அதில், “நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் இனி மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தெளிவாக எழுத வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை பொதுமக்கள் பலரும் வரவேற்று சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர், ”மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் எழுதுவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கெனவே இதுகுறித்து ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் இது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் நேற்று திடீரென தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி பரவியுள்ளது. அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உச்சபட்ச பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் i20!
டிஜிட்டல் திண்ணை: மோடி அட்டாக்… ஃப்ரஷ் ரிப்போர்ட்: அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்