கள்ளக்குறிச்சி கலவரப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Published On:

| By Jegadeesh

கள்ளக்குறிச்சியில் கலவரம் நடந்த கனியாமூரில் உள்ள சக்தி  தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை ( ஜூலை 27 ) முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கலவரம் ஏற்பட்ட சக்திப் பள்ளி மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில்  கலவரம் ஏற்பட்ட சக்தி பள்ளி மாணவர்களும் நாளை மறுதினம் ( ஜூலை 27 ) முதல் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

தற்போது மூடப்பட்டுள்ள பள்ளிக்கு அருகிலேயே 3 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருவதால்,

அங்கு சக்திப் பள்ளி மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

ADVERTISEMENT

பெற்றோர் – ஆசிரியர் கழகம் சார்பில் அனைவரது கருத்தும் கேட்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர்,

மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்வதற்காக பேருந்து ஏற்பாடும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்கள் வேறு எந்த பள்ளியில் பயில விருப்பம் தெரிவித்தாலும் அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி உறுதியளித்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share