ஒரே நாடு ஒரே தேர்தல்: குழு அமைத்தது மத்திய அரசு!

Published On:

| By Monisha

one nation one election special committe

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.

ADVERTISEMENT

செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சூழலில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

அனுமதியற்ற மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற அவகாசம் : முத்துசாமி புதிய அறிவிப்பு!

‘விஜய் 68’ படத்தில் ‘மங்காத்தா’ இடம்பெறுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share