சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த ராட்சத வழிகாட்டுப் பலகை இரு புறமும் உள்ள கம்பங்களோடு பெயர்ந்து விழுந்தது.
இன்று (ஆகஸ்டு 7) பிற்பகல் யாரும் எதிர்பாராத சமயத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசுப் பேருந்து ஒன்றும் பலத்த சேதமடைந்தது. விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், காவல் துறையினர் சாலையில் கிடந்த பலகையை அகற்றியதுடன் விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- க.சீனிவாசன்
தமிழ் மீடியத்தில் படித்து சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனரான விஞ்ஞானி கலைச்செல்வி
