கரூர் மாவட்டம், மாயனூரில் பாசன வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலை மீட்டு மாயனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையோரம் தண்ணீர் பாலம் அருகே வசிப்பவர் கணபதி (28), சித்ரா (26) தம்பதியினர். இவர்களது மகள் நாய்க் கடித்து உயிரிழந்த நிலையில், கிஷாந்த் என்ற ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஒன்றரை வயதாகும் கிஷாந்துக்கு, தாய் சித்ரா நேற்று (நவம்பர் 20) காலை உணவு ஊட்டிவிட்டு வீட்டு வேலைகளை பார்த்துள்ளார். அரை மணி நேரத்திற்கு பிறகு வீட்டினுள் மகன் கிஷாந்தை காணாமல் தேடியுள்ளார்.
அக்கம்பக்கம் வீடுகளில் தேடியும் சிறுவன் இல்லாததால், பதற்றமடைந்தவர்கள் வாய்க்காலில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என்பதால் மாயனூர் கதவணை நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் வாய்க்காலில் சுமார் ஒரு மணி நேரம் தேடிய நிலையில் சிறுவன் கிஷாந்தை சடலமாக மீட்டனர்.
இதையடுத்து மாயனூர் போலீஸார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை கூட்டம் முதல் டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா: க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்
கொஞ்சம் இங்க பாருங்க… : அப்டேட் குமாரு
மருத்துவரே இல்லாமல் செயல்படும் ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையம்!
புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர்!
29 ஆண்டுகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை… ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு விவாகரத்து!