பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை மறுதினம் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில், கல்வி நிலையங்களுக்கு நாளை (அக்டோபர் 30) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர். ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்துக்கு நாளை முழுநாள் விடுமுறையாகும்.
நவம்பர் 1ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
”விஜய் வீசிய வெடிகுண்டு அவருக்கு எதிராகவே வெடித்துள்ளது” : திருமாவளவன்
ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!