மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்:
- நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ1.4 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்
- மத்திய அரசு ரூ17.5 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு
- அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் (தமிழக அரசின் தோழில் விடுதிகள் போல)
- விபத்து இழப்பீடாக பெறும் தொகைக்கு வரிவிலக்கு
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் வரை நீட்டிப்பு
- இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விரைவான வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- மின் நிதி நிறுவனமும், கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனமும் மறுசீரமைக்கப்படும்
- நகராட்சி பத்திரங்கள்: பெருநகரங்களின் மேம்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கும் கூடுதலான ஒற்றை கடன் பத்திரங்களுக்கு 100 கோடி ரூபாய் ஊக்கத்தொகை
