மலேசியாவில் பல்வேறு பணிகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 முதல் 42 வயதிற்கு உட்பட்ட Qc Inspector (Cewip 31) பணிக்கு மாத வருமானம் ரூ.70,000 – 80,000, Pipling Engineer பணிக்கு ரூ.60,000 – 80,000, Planning Engineer (Primavera P6) பணிக்கு ரூ 70,000 – 84,000, Tendering Engineer பணிக்கு ரூ. 70,000 – 76,000, Piping Foreman பணிக்கு ரூ. 54,000 – 62,400 ஆகும் மற்றும் TIG & ARC Welders Cs பணிக்கு மாத வருமானம் ரூ. 42,000 – 50,000 & Plpe Fitter பணிக்கு ரூ.38,000 – 50,000 ஊதியமாக வழங்கப்படும். OMCL Singapore Jobs 2025
உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400 மட்டும் செலுத்தினால் போதும்.
இப்பணிகளுக்கான நேர்காணல் 18.06.2025 அன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் (Resume Passport Original & Copy) Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை கிண்டி சென்னை -32.
கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267), வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது. OMCL Singapore Jobs 2025