அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. CPS Abolition Movement Condemns
சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 22) அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், “அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு ஊழியர்கள் நலனில் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து வருகிறது.
அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகளை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்தவரையில், ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவிடம் பல அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளனர். அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் மிகுந்த கவனத்தோடு கருத்தில் கொண்டுள்ளோம்” என்று கூறியிருந்தார். CPS Abolition Movement Condemns
இந்தநிலையில் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க வேண்டாம் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் எச்சரித்துள்ளது.
சிபிஎஸ் (Contributory Pension Scheme) ஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கை தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு ஊழியர் சங்கங்களிடம் அந்த குழு கருத்துகளை கேட்டிருக்கிறது என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மூன்றில் எந்த திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்துவது என்பது தொடர்பாக ககன் தீப் சிங் ஐஏஎஸ் தலைமையில் அலுவலர் குழு அமைக்கப்படும். அக்குழு ஒன்பது மாதத்தில் அரசுக்கு பரிந்துரை வழங்கும் என்று தமிழக அரசின் செய்தி அறிக்கை மூலம் 04.02.2025 அன்று அறிவித்தது. CPS Abolition Movement Condemns
ஆனால், தமிழக அரசு அறிவித்து 2 மாதங்கள் கடந்த பின்பும் அலுவலர் குழு அமைப்பது தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிடவில்லை.
செயல்பாட்டுக்கு வராத சுகன்தீப் சிங் தலைமையிலான அலுவலர் குழு, அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து கருத்துக்களை கேட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள தகவல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். CPS Abolition Movement Condemns
அலுவலர் குழு அமைப்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறானது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்: 309 ன்படி CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். CPS Abolition Movement Condemns









