102 வயதிலும் கெத்தாக கிரிக்கெட் விளையாடும் முதியவர்!

Published On:

| By Minnambalam

ஜம்மு காஷ்மீரில் 102 வயதான முதியவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் பார்க்காதவர்கள் தற்போது எவரும் இல்லை. கிரிக்கெட் பற்றி முழுமையான தெளிவு இல்லாதவர்கள் கூட தற்போது கிரிக்கெட் பார்க்கிறார்கள். இது குறைசொல்வதற்கு அல்ல.. கிரிக்கெட் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு விளையாட்டாக மாறி விட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி கரம் தின் என்ற 102 வயதான முதியவர் கிரிக்கெட் விளையாடி உள்ளார். மிகவும் சுறுசுறுப்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் 102 வயது முதியவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ADVERTISEMENT

இதுத் தொடர்பாக பேசிய ஹாஜி கரம் தின், “எனக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். என் மகனையும் கிரிக்கெட் விளையாட வைக்கிறேன். இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்கவே இங்கு வருகிறேன். என் வயதில் யாரும் இப்போது இல்லை, அனைவரும் இறந்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அன்று குஷ்பு… இன்று ராதிகா… மீண்டும் கைதாகும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி?

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது – மெட்ரோ நிர்வாகம்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share