ஜென் 3 மாடலை அறிமுகப்படுத்தும் ஓலா… இவ்வளவு ஃபெசிலிட்டி இருக்கா? 

Published On:

| By Selvam

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், தனது மூன்றாம் தலைமுறை (Gen 3) ஸ்கூட்டர்களை நாளை (ஜனவரி 31) அறிமுகப்படுத்த உள்ளது.

எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பலதரப்பட்ட வகை இ-ஸ்கூட்டர்களை தயார் செய்ய வருகிறது. ‘சங்கல்ப் 2024’ எனும் பெயரில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது.

மேலும் இன்றைய தலைமுறையினருக்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பலதரப்பட்ட வகை இ-ஸ்கூட்டர்களை தயார் செய்து வருகிறது. Ola Gen 3 Launches on January 31st

இந்த நிலையில், ஓலா நிறுவனரான பவிஷ் அகர்வால் ‘ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் நாளை (ஜனவரி 31- காலை 10.30 மணிக்கு) வெளியிடப்படும்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

‘ஓலா எலெக்ட்ரிக், ஜென் 3 ஸ்கூட்டர்ஸ் வெளியிடும் தருவாயில் எங்களின், அடுத்த மாடலை வெளியிடுகிறோம். அதிக செயல்திறன், அதிக அம்சங்கள், சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றுடன் ஒவ்வொரு வகையிலும் ஜென் 2 தயாரிப்புகளை நாங்கள் கணிசமாக விஞ்சியுள்ளோம். தொழில்துறையை மீண்டும் மாற்றுவது ஓர் ஆச்சரியம்’ என்று அவர் தனது எக்ஸ்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெனரல் 3 மாடலில் ஒருங்கிணைக்கப்பட்ட பேட்டரி, காந்தமில்லாத மோட்டார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சேசிக்குள் இருக்கும் என்றும் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில், இந்த வடிவமைப்பு செயல்திறனை 26 சதவிகிதம் மேம்படுத்தும் மற்றும் 20 சதவிகிதம் செலவைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share