வணிக சிலிண்டர் விலை குறைந்தது: பொதுமக்கள் ஏமாற்றம்!

Published On:

| By christopher

Commercial gas cylinder price reduced

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை இன்று (ஆகஸ்ட் 1) குறைந்துள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே காய்கறி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள உணவக உரிமையாளர்கள் சிலிண்டர் விலை குறைய வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

ADVERTISEMENT

அதன்படியே ஆகஸ்ட் முதல் நாளான இன்று 19 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டர் விலையில்  ரூ.92.50 குறைந்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் இன்று முதல் ரூ.1852க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன்மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வர்த்தக சிலிண்டர் விலை ஆயிரத்து 850 ரூபாயை தொட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தக சிலிண்டர் விலை ஆயிரத்து 831 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வீட்டு சிலிண்டருக்கான விலையில் இன்று எந்தவொரு மாற்றமும் அறிவிக்காத நிலையில் ரூ.1,118 ஆகவே விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

அதிகாலையில் நடந்த என்கவுண்டர்… 2 ரவுடிகள் உயிரிழப்பு: நடந்தது என்ன?

இந்திய விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களில் முதலிடம் வகிப்பது எது தெரியுமா?

நெம்மேலி குடிநீர்: மேலும் 9 லட்சம் பேர் பயனடைவார்கள் – சிவ்தாஸ் மீனா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share