உள்ளங்கையில் அடங்கக்கூடிய பிரின்ட்டர் ஒன்றை HP நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நமது மொபைல் போன்களில் இருக்கும் புகைப்படங்களை பிரின்ட் செய்ய இது பயன்படுத்தப்படும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கும் இந்த சாதனம், கடந்த வியாழன் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அமேசான் மற்றும் HP நிறுவனத்தின் இணையதளத்தில் இது கிடைக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,
அந்நிறுவனத்தின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான ராஜ் குமார் ரிஷி இது பற்றி, அனைவரும் ஸ்மார்ட் போன்களில் படம் எடுப்பது என்பது இப்பொழுது தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. ஆனால் அந்த படங்கள், டிஜிட்டலாக தங்கள் போன்களில் வைத்துவிட்டு மறந்துவிடுகின்றனர். மொபையிலில் எடுத்த படங்களை பிரின்ட் செய்ய எவரும் செல்வதில்லை. எனவே அவர்கள், இந்த பிரின்ட்டரை யன்படுத்தி தங்கள் நினைவுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளலாம்.” என்று கூறினார்.

இந்தியாவில் பிரின்ட்டர் வாங்குபவர்கள் மிகவும் குறைவு. பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மட்டுமே பிரின்டர்களை வாங்குகிறார்கள். எனவே, சந்தை சவால்களை சமாளிக்க இது போன்ற புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன. மேலும், பலருக்கும் பயன்படும் வண்ணம் தங்கள் சாதனங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த பிரின்ட்டரை ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் செயலிகளைக்கொண்டு கட்டுபடுத்தலாம் என்றும், பிரின்ட் எடுப்பதற்கு முன், எடிட்டிங் மற்றும் பல விஷயங்கள் செய்யலாம் என்றும் தெரிகிறது. இதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பேப்பர்கள் பயன்படுத்தப்படுகிறது. 20 பேப்பர்களின் விலை சுமார் 500 ரூபாய். இந்த பிரின்ட்டர் அறிமுக சலுகையாக 8,999 ரூபாயில் கிடைக்கிறது.,”
