முதல் படத்திலேயே அதிர்ச்சி கொடுத்த குட்டி நயன்

Published On:

| By Kavi

குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள படம் ஓ மை டார்லிங். இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமார் மகளாக நடித்து இருந்தார்.

ADVERTISEMENT

இப்படத்தில் அஜித்குமார் – அனிகா இவருக்கும் இடையேயான தந்தை – மகள் உறவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

அஜித் – அனிகா இடையேயான தந்தை – மகள் காட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அனிகாவுக்கு வாய்ப்பு அளித்திருந்தார் இயக்குனர் சிவா.

ADVERTISEMENT

இப்படத்தில் அஜித்குமார் – நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்து இருந்தார். விஸ்வாசம் படத்தின் திரைக்கதையின் மையப்புள்ளியான கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருந்தார்.

படத்தின் வணிக ரீதியிலான வெற்றி அனிகாவின் புதிய பட வாய்ப்புக்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

ADVERTISEMENT
Oh My Darling Trailer Anikha Lip Lock Scene

அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

இப்படம் கடந்த வாரம் தான் ரிலீஸ் ஆனது. இதையடுத்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ஓ மை டார்லிங்.

ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா.

காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது. இந்நிலையில், ஓ மை டார்லிங் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 

Oh My Darling Trailer Anikha Lip Lock Scene

இந்த டிரைலர் ரிலீசான பின் அனிகாவை பற்றிய பேச்சு தான் சமூகவலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் இப்படத்தில் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், அனிகா, நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிலரோ டிரைலரிலேயே இத்தனை லிப்லாக் காட்சி என்றால், அனிகா படத்தில் என்னென்ன கவர்ச்சி அட்ராசிட்டி செய்திருக்கிறாரோ என பதிவிட்டு வருகின்றனர்.

இராமானுஜம்

எய்ம்ஸ் மருத்துவமனை: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!

”நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தொடரும்”: எடப்பாடி பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share