கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், திலீப் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
தற்போது அந்த கமிட்டியின் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது. இது தொடர்பாக நடிகைகள் புகார் கொடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சையால் ஒட்டுமொத்த மலையாள சினிமா துறையை எல்லோரும் தவறாக கருதுவதாக நடிகை பார்வதி கொந்தளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தில் பார்வதி நடித்துள்ளார். இந்த சர்ச்சை பற்றி பேசிய அவர் எல்லா நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் தான் என்கிற மனநிலையில் பேசுவது கோபத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தான் கடந்த 6-7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் தனக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் யாரும் தருவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, துணை நடிகையான ஜூபிதா , மலையான சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா’ வில் உறுப்பினராக வேண்டுமென்றால் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டுமென்று குற்றம் சாட்டியுள்ளார். அம்மா அமைப்பின் முன்னாள் செயலாளர் எடவேலா பாபு இருந்த போது, தான் உறுப்பினராக அணுகியதாகவும் அப்போது, மெம்பர் பீஸ் தேவையில்லை. அட்ஜஸ்ட்மென்ட்தான் தேவை என்று அவர் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட எந்த நிறுவனத்துடனும் தான் பணி செய்யவில்லை என்றும் எடவேலா பாபு தவிர நடிகர் சதீஷ்பாபு, டைரக்டர் ஹரீஸ் பாபு ஆகியோருடன் தன்னிடத்தில் தவறுதலாக நடந்துள்ளதாக ஜூபிதா கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘அழகிய லைலா’-வை தொடர்ந்து ‘வாட்டர் பாக்கெட்’… வைரலான அன்ஷா ஷாகீர்
விஜய் சேதுபதி படத்தில் நித்யா மேனன்