ADVERTISEMENT

உயர் மட்டக் கூட்டம்: ஒடிசா விரையும் பிரதமர் மோடி

Published On:

| By Aara

ஒடிசாவில் கொடூர ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட பிரதமர் மோடி இன்று (ஜூன் 3) செல்கிறார்.

ஒடிசாவின் பால்சோர் அருகே சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவ்ரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடொன்று மோதிக் கொண்ட கொடூர விபத்தில் இதுவரை 238 பேர் வரை இறந்துவிட்டனர்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த பிரதமர் மோடி இன்று டெல்லியில் உடனடியாக ரயில்வே உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டினார்.

அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொண்டார். ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடிக்கு பவர் பாயின்ட் மூலம் விளக்கம் தரப்பட்டது.

ஏற்கனவே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், பால்சோர் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி, ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கும் மருத்துவமனைகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து உடனடியாக ஒடிசா செல்ல இருக்கிறார்,

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, கட்டாக் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்க இருக்கிறார்.

வேந்தன்

ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்? அமைச்சர் தகவல்!

படுகாயமடைந்தவர்களை தமிழகம் அழைத்து வர விமானம் ஏற்பாடு: தென்னக ரயில்வே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share