ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை : ரயில்வே அமைச்சர்!

Published On:

| By Kavi

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான விசாரணையை சிபிஐக்கு, ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இன்று மாலை ஒடிசாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு வழித்தடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது” என்று கூறினார்.

முன்னதாக ஜூன் 2ஆம் தேதி மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே, ஹவுராவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்கு உள்ளாகின.

இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படிருப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share