ஒடிசா ரயில் விபத்து: சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிப்பு!

Published On:

| By christopher

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி கட்டிடம், மாணவர்களின் அச்சம் காரணமாக இன்று (ஜூன் 9) இடிக்கப்பட்டது.

கடந்த 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பாஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 278 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் வைப்பதற்காக அருகே இருந்த பாஹனாகா அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்டது.

பின்னர் உடல்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், அந்த பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குத் திரும்ப தயக்கம் காட்டினர்.

இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி, சடலங்கள் வைக்கப்பட்டிந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்குமாறு பள்ளி நிர்வாகக் குழுவும், பெற்றோரும் மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

65 ஆண்டுகால அந்த அரசுப்பள்ளியில், மாணவர்களின் பயம் போக்குவதற்கு சில ஆன்மீக சடங்குகளைப் பின்பற்றவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டது.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று வந்த பாலசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், மற்றும் மாணவர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. விரைவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு மாணவர்கள் அச்சம் நீங்கி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செயற்கையான மின் தட்டுப்பாட்டை அரசே ஏற்படுத்துகிறதா? : எடப்பாடி

பாம்பு கடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share