‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.
பிரபல யூடியூப் சேனலான எரும சாணி புகழ் விஜய்- ஹரிஜா, யாஷிகா ஆனந்த், கார்த்திக், ரித்விகா, முனிஷ்காந்த், பரிதாபங்கள் புகழ் கோபி – சுதாகர் உள்ளிட்ட பலர் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் பணியாற்றியுள்ளார்கள். அக்ஷயா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 12ஆம் தேதி) ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
ஏ சர்டிபிகேட் படத்தை பார்க்க ஒரு தியேட்டருக்கு செல்லும் இளைஞர்கள், அந்த தியேட்டரில் இருக்கும் பேயிடம் சிக்கிக் கொள்கின்றார்கள். அதன்பின் அந்த தியேட்டரில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்து வெளியேறப் போகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல தடைகளுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
