பெண் ஐபிஎஸ் அதிகாரி குறித்து ஆபாச பதிவு : ஜோதிமணி கண்டனம்!

Published On:

| By christopher

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிடப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான ஆபாசமான, அறுவெறுத்தக்க, ஒரு நாகரிமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்கமுடியாத கமெண்ட்டுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். (பொதுவெளியில் பதிவிட முடியாத அளவிற்கு ஆபாசமானவை)

ADVERTISEMENT

ஒரு பெண், அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரது மார்பையும், உடலையும் மட்டுமே பார்க்கிற, அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில், பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்?

அவரது கணவரை (வருண்குமார் ஐபிஎஸ் ) இழிவுபடுத்துவதாக நினைத்து, அவர் குடும்பத்துப் பெண்கள், குழந்தைகள் மீது ஆபாசத் தாக்குதலை, அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்து விடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ADVERTISEMENT

ஒரு காவல்துறை அதிகாரிக்கும், அவர் குடும்பத்திற்குமே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன?

இதுபோன்ற இணைய, சமூக ஊடக, ஆபாசத்தாக்குதலால், எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை பெண்களின் மீதான இதுபோன்ற ஆபாசத்தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தையே சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்துபோய்விட முடியாது. இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும். தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு சக பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு எனது அன்பையும், உறுதியான ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்:  எந்த வயதில், எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது?

டாப் 10 நியூஸ் : கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா முதல் விடாமுயற்சி அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான மீன் பிரியாணியும் அதற்கேற்ற ஏற்ற மீனும்…

இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share