உணவுகளின் மூலம் எடை கூடுகிறது, குறைகிறது என்று மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது. அதாவது, ஓர் உணவு ஆரோக்கியமானது என்பதற்காக, அதை அளவுக்கதிகமாகவும், நேரம் தவறியும் சாப்பிட்டால், அதுவும் பாதகமான விளைவையே ஏற்படுத்தும்.
உடல் பருமனுக்கு காரணமாகும். உதாரணத்துக்கு, நட்ஸ் ஆரோக்கியமானது என்பதற்காக, அதை நாள் முழுவதுமோ, அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடுவது சரியானதல்ல. ஆரோக்கிய உணவுகள் அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும்.
உடல் பருமன் ஏற்படுவதற்கு தைராய்டு பிரச்னை ஒரு காரணம் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உடல் பருமன் ஏற்படுவதால் அதன் தொடர்ச்சியாகவோ அல்லது பருமனின் தூண்டுதலாகலோ தைராய்டு பாதிப்பு உண்டாகலாம்.
ஆனால், தைராய்டு உள்ளிட்ட எந்த ஹார்மோன்களாலும் உடல் பருமன் உண்டாவதில்லை. அப்படி எடை கூடினாலும் 2 சதவிகிதம் என்ற அளவில் அரிதாகவே இருக்கும்.
அதேபோல் தைராய்டு பாதிப்பால் எடை கூடினாலும் 3 அல்லது 5 கிலோ என்ற சராசரி அளவில்தான் அதிகரிக்கும். பருமனைக் குறைக்கும்போது அந்த தைராய்டு அளவு நார்மலாகிவிடும்.
ஹார்மோன் கோளாறுகள் காரணமாகவும் உடல் பருமன் உண்டாவதில்லை. அரிதாக 1000 பேரில் 2 பேருக்கு மட்டுமே ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பருமன் ஏற்படலாம்.
`பிசிஓடி’ (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை காரணமாகவும் எடை கூடுவதில்லை. எடை அதிகரிப்பதால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் உண்டாகிறது. அதன் தொடர்ச்சியாகவே பிசிஓடி பிரச்னை உண்டாகிறது.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு எடை கூடும் என்பதும் தவறான நம்பிக்கையே.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உங்கள் நிறத்துக்கேற்ற நெயில் பாலிஷ் எது?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : முருங்கைக்காய் முந்திரி பொரியல்
முப்பாட்டன் முருகன் முத்தமிழ் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு