கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர்!

Published On:

| By Kavi

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு உதவுவது ட்ரை ஃப்ரூட்ஸ்..ஒவ்வொரு வேளைக்கும் சிறிதளவு என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகளைச் சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம். அதற்கு இந்த ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர் உதவும்.

என்ன தேவை?

ரோல்டு ஓட்ஸ் – ஒரு கப்

பாதாம், முந்திரி – தலா 10

வேர்க்கடலை – 20

கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 20

கறிவேப்பிலை – 10

பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறிக்கொள்ளவும்)

கொப்பரைத் தேங்காய் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்

பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கிஸ்மிஸ், கொப்பரைத் தேங்காய் என்று இதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும். வறுத்தவற்றை டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடியவிடவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து, பின்னர் மிளகுத்தூள், உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ளவை எல்லாவற்றையும் சேர்க்கவும். கடைசியாகப் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், தட்டையான அவலை வறுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப இனிப்பு, காரம் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ட்ரை ஃப்ரூட் – பைனாப்பிள் ரோல்!

கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் பிக்கிள்!

ஹெல்த் டிப்ஸ்: ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டலாம்!

நைட்டு நடந்தா நாய் கடிக்கும்ல : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share