தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணம் என்று பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது முயற்சி செய்து வருவது செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்டு செயல்படும் கருவிகளை தயாரிக்கத்தான். அதன்படி பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் வகையில் கணினிகளை வடிவமைத்து வருகின்றனர். உதாரணமாகக் கடந்த முறை நடைபெற்ற உலக அழகிகளுக்கான போட்டிக்கு, போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி கணினிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த பணியை மேற்கொள்ள (pre desinged algorithm) முன்னரே வடிவமைக்கப்பட்ட புரோகிராம்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புரோகிராம் ஆனது அதுவரை நடைபெற்ற உலக அழகி போட்டிகளின் முடிவுகளை வைத்து முதலில் வெள்ளை நிறமாக இருக்கும் நபர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது. ஆனால் அந்த போட்டிக்காக உலகின் பல்வேறு தரப்பு அழகிகளும் தங்களின் புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். அதில் பெரும்பாலும் வெள்ளை நிறமாக உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்துள்ளது அந்த கணினி. அழகிற்கும், நிறத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அந்த கணினிகள் அறிந்திடவில்லை. இதுகுறித்து ஆராய்ச்சி செய்த நிஸ்ஹீத் கே.விஷ்னாய் ஆய்வின் முடிவினை வெளியிட்டார். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள school of computer and communication sciences-ல் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கணினி பயன்பாடுகளின் கோட்பாடுகளில் தேர்ச்சி பெற்றவர்.
அதேபோன்றே கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் tay என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட் செயற்கை நுண்ணறிவு முறையில் ஏற்பட்ட சில சிக்கல்களால், அந்நிறுவனம் அதனை கைவிட்டது. உதாரணமாக ஒருவரை வேலைக்கு அமர்த்த நேர்முகத் தேர்வு நடத்துவது வழக்கம். தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் பட்சத்தில், முதலில் ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் அவரை நேர்முகத் தேர்வு செய்வதற்கு முன்னரே அவரின்அ ப்ளிகேஷன்களை நிராகரிக்கிறது. எனவே நுண்ணறிவு கொண்ட கணினிகளின் பதிவுகளை புரிந்து கொள்வது சற்றே கடினமான ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி மனிதனின் பதில்களுக்கு சில பதில்கள் முரண்பாடான ஒன்றாக உள்ளன. தற்போது பெரும்பாலான சமூக வலைதளங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட புரோகிராம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயற்கை நுண்ணறிவு தான் ஒரு பயனரின் இணைய தேடல்களை கண்காணித்து அவர்களின் சமூக வலைதளங்களில் அதுகுறித்த பல்வேறு தகவல்களை அவ்வப்போது வெளிக்காட்டி வருகிறது. அதற்கு மிகப்பெரும் உதாரணம் கடந்த அமெரிக்க தேர்தல் பற்றிய தேர்தலை அதிக நபர்கள் இணையத்தில் தேடியதால், மனிதர்கள் வாழ்வின் வரலாற்று நிகழ்வாக இந்த தேர்தலை பதிவிட்டுக் கொண்டது இந்த செயற்கை நுண்ணறிவு.
சாதாரணமாக ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி மற்றும் நரம்பியல் வலையமைப்பு கொண்ட கணினிகள் பொதுவாக மனிதனின் ஈடுபாடு இல்லாமல் தானாக இயங்கும் வகையில் கண்டறியப்பட்டவை. உலகின் சிறந்த கணினி பயன்பாட்டாளர்களும் அதன் பதில் குறித்து முன்னேரே அறிந்து கொள்ள முடியா வண்ணம் அவை செயல்படவேண்டும் என்று மின்ட் பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான ராகுல் மதன் வெளியிட்ட “Beyond Consent:A new paradigm for data prodection” என்ற ஆய்வில் வெளியிட்டார். இந்த செயற்கை முறையில் உள்ள குறைபாடுகளை தவிர்க்க ஒரே வழி block box testing என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி செயற்கை நுண்ணறிவு கணினியின் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் வைத்து அதன் சோதனைகள் முழுவதும் முடிவுற்று, அதன் செயல்பாடுகள் முழுமைபெறும் பட்சத்தில் அதன் பயன்பாடுகளை மற்ற கணினிகளுக்கும் செயல்படுத்துவது இதற்கான தீர்வாக இருக்கும்.
block box testing முறையில் ஒரு கணினியில் data செயல்பாடுகள் கவனிக்கப்படாமல், அதன் input மற்றும் output மட்டும் கண்காணிக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்றே ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகளைத் தயாரிக்கும் முயற்சிகளை பல்வேறு நிறுவனங்களும் கைவிட்டுள்ளனர். இன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலிலும் பேஸ்புக் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் ரோபோட்களில் ஆராய்ச்சியை நிறுத்தியது என்ற பொய்யான தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும் சில நிறுவனங்கள் மட்டும் இந்த முறையை கைவிடாமல் அதன் குறைகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.