அதிமுக உட்கட்சி வழக்கில் தீர்ப்பு.. ஓபிஎஸ் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) தீர்ப்பளித்தது. O Panneerselvam reacts Aiadmk case

இதுகுறித்து தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,

“சென்னை உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் சட்டவிதிகள், தேர்தல் நிலைப்பாடுகள் பற்றிய பிரச்சனைகள் குறித்து தீர்த்து வைப்பதற்கு அதிகாரம் உள்ளது என்று இன்றைக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பது நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவித்தார். O Panneerselvam reacts Aiadmk case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share