அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று (நவம்பர் 8) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.d to ops
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டு,
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக நீதிபதி சதீஸ்குமார் நேற்று உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று காலை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, மனுவை ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதிகள் அமர்வு, மேல் முறையீட்டு மனு அவசர வழக்காக நாளை மறுநாள் (நவம்பர் 10) விசாரிக்கப்படும் என்று ஒப்புதல் அளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்திரேலியா வெற்றி: கொண்டாடும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்!