அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் பன்னீர்

Published On:

| By Guru Krishna Hari

அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்தை நோக்கிப் புறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதோடு அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு 9 மணியளவில் செல்ல இருக்கிறார்.

அதேசமயத்தில் இன்று (ஜூலை 11) காலை முதல் பசுமை வழிச் சாலையில் உள்ள வீடு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்களை வெளியில் வந்து சந்தித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுள்ளார் பன்னீர் செல்வம்.

ADVERTISEMENT

ஓபிஎஸ் வீட்டுக்கு அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கமும் வந்துள்ளார். சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க இருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தற்போது ஓபிஎஸ் வீட்டில், தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்தால் என்ன செய்வது? பொதுக்குழுவுக்கு செல்லலாமா? வேண்டாமா? என ஆலோசனை நடந்து வருகிறது. அதே சமயத்தில் ஓபிஎஸ் 9 மணியளவில் தலைமை அலுவலகத்துக்கு செல்லவுள்ளார்.

ADVERTISEMENT

இதனால் தலைமை அலுவலகம் முன்பும் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

-பிரியா

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share