மிடில் ஆர்டரை நம்பாத இந்தியா!

Published On:

| By Balaji

லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடக்க விக்கெட்டுகளை இழந்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இத்தொடரின் முக்கியப் போட்டியான மூன்றாவது போட்டி இங்கிலாந்தின் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று (ஜூலை 17) தொடங்கியது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோருக்குப் பதில் தினேஷ் கார்த்திக், ஷ்ராத்துல் தாக்கூர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்தனர்.

ADVERTISEMENT

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவனுடன் இணைந்து நிதான ஆட்டத்தைக் வெளிப்படுத்தத் தொடங்கினார். பவுண்டரிகளில் கவனம் செலுத்தாமல் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்கத் தொடங்கினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவன் ரன்-அவுட் ஆனார்.

ADVERTISEMENT

தற்போது இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. விராட் கோலி 37 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share