டீமுனா 11 பேரும் ஆடனும் டா!! – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இந்தியாவின் டி20 கனவு வெற்றிகரமா முடித்து வைக்கப்பட்டுவிட்டது. என்ன கொடுமைன்னா, இருக்கிறதுலேயே சப்பை டீம் என இந்திய ரசிகர்கள் எள்ளி நகையாடிய வெஸ்ட் இன்டீஸ் கிட்ட தோத்ததுதான். அதுவும் 192 என்கிற மிகப்பெரிய டார்க்கெட்டை, நட்சத்திர வீரர் கெயில் 5 ரன்களில் அவுட்டாகிய நிலையிலும் சேஸ் செய்து சாதித்ததுதான் பெரிய விஷயம். வழக்கம் போல இந்திய ரசிகர்கள் இவருதான் காரணம் அவருதான் காரணம்ன்னு அடிச்சுவிட்டுகிட்டு இருந்தாங்க. ட்விட்டர் மட்டுமில்லை, பேஸ்புக்கிலும் கிரிக்கெட்டுதான் எதிரொலித்தது.

// @karthikstrong5

ADVERTISEMENT

இந்தியா தோத்து போனதுக்கு கோலி தான் காரணம்.. கண்டுபிடிப்பு தோணி பேஃன்ஸ்.. அடேய் அர டிரவுசர்களா அவனால தான் நம்ம இவளோ தூரம் வந்தோம்..//

// @MrElani

ADVERTISEMENT

நாமளே தோனி,யுவின்னு குரூப்குரூப்பா அடிச்சிகிறொம் இதல்லாம் பாத்துதான் கண்ட நாயும் நம்ம நாட்ட பத்தி நாக்கு மேல பல்ல போட்டு ட்விட்டுது //

//@IamMadhavan

ADVERTISEMENT

தோனி நான் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாடுவேன் னு சொல்றது,

கலைஞர் ஒவ்வொரு தேர்தல்யும் இதான் தனக்கு கடைசி தேர்தல் னு சொல்றதுக்கு சமம். //

// @sudhanks: கெயில் அடிக்கலனாலும் அவன் ஜெயிக்குறான், இங்க கோலி அடிச்சும் நாம தோக்குறோம்!! #டீமுனா 11 பேரும் ஆடனும் டா!! //

//@naaraju

அப்பிரஸ்மீட்டில்,‘அறிவிருக்குன்னு எந்த அறிவை வைச்சுக் கண்டுபிடிச்ச’ மொமெண்ட்டை நிகழ்த்தியிருக்கிறார் தோனி. ஆனால்,இரசிக்கும் விதமாக.. 🙂 //

Osai Chella

14 hrs ·

நான் ஆல்வின் காலிசரன் காலத்திலிருந்தே வெஸ்ட் இண்டீசின் ரசிகன். கபில் தேவ் டீம் மட்டுமே விதிவிலக்கு. எனவே இன்றும் நான் வெஸ்ட் இண்டீஸ் மாதாகீ ஜெய் தான் ! ஆண்டிநேசலிசம் வாழ்க ! West Indies is / was the only country that has fans in every country they tour !!

Iam Suriyaraj

13 hrs ·

டியர் பவுலர்ஸ், நீங்க பந்து போட்ட அழகை பார்க்கையில ‘தோழா’ படத்துல வர்ற நாகர்ஜுணாவுக்கே நாக்கு பூச்சி எட்டி பார்த்திருக்கும்…

விவேக் ஆனந்த்

13 hrs ·

பவுலர்களை குறை சொல்லவே முடியாது. முழுக்க முழுக்க பேட்ஸ்மென்களின் தவறு.

டாஸ் தோத்தப்பவே பாதி மேட்ச் முடிஞ்ச்சு.

பிசிசிஐ இனிமேலாச்சும் மும்பை மாதிரி மட்டமான பிட்ச் எல்லாம் உலக கோப்பைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.!

‪#‎WT2016‬

Yuva Krishna

32 mins ·

அலங்கோலத்தம்மாள் ஆட்சியில் இந்திய கிரிக்கெட் அணி எப்படி வெல்லும்?

2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை உடன்பிறப்பு மகேந்திரசிங் தோனி வென்று கொடுத்தது டாக்டர் கலைஞர் தலைமையிலான நல்லாட்சியில் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அடுத்த டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகள் நமதே!

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share