கோடை விடுமுறையில் குறிப்பிட்ட உறுப்பினர்களுடன் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும் நம் வீடு, சில நேரங்களில் நிறைய குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் திண்டாட்டமாகிவிடும். என்ன சமைத்துத் தரலாம் என யோசிக்கத் தொடங்கி விடுவோம். அப்படிப்பட்ட நேரங்களில் உதவும் இந்த திடீர் போண்டா.
**என்ன தேவை?**
இட்லி மாவு – ஒரு கப்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
கேரட் – வெங்காயம் (துருவியது) – 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை விட்டு கடலை மாவு, மிளகாய்த் தூள், இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை. கேரட் – வெங்காய துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இட்லி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டினாற் போல போடவும். வெந்து மேல் வரும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து அரித்து எடுக்கவும்.
**என்ன பலன்?**
எளிதில் ஜீரணமாகும் இந்த உணவு, குழந்தைகளுக்கு மட்டுமல்ல… அனைவருக்கும் ஏற்றது. மாலை நேர உணவாக இதைப் பரிமாறினால் இரவு உணவை அதிகம் சமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
[நேற்றைய ரெசிப்பி: ஆலு பனீர் சாட்](https://minnambalam.com/k/2019/05/25/2)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.





