அடிப்படைத் தேவையான தண்ணீரைத் தாண்டி மனிதனின் தாகம் தீர்க்கும் பானங்களில்தாம் எத்தனை வகை… ஆதிகாலம் முதல் அவசர யுகம் வரை மனித கலாச்சாரத்தில் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விதம்விதமாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று கோடைக்கு இதமளிக்கும் இந்த பட்டர் ஃப்ரூட் சாக்கோ. பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் குட்டீஸுக்கு ஏற்ற பானமாக இது அமையும்.
என்ன தேவை?
- நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகாடோ) – 2
- கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்
- கோகோ பவுடர் – அரை கப்
- துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்
- நாட்டுச் சர்க்கரை – அரை கப்
அலங்கரிக்க:
சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும். குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக்கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.