ஏ.டி.எம்மில் கள்ளநோட்டுக்கள்!

Published On:

| By Balaji

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் உள்ள தனியார் வங்கியில் குழந்தைகள் விளையாடும் கள்ளநோட்டுக்கள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்தைச் சேர்ந்த கிட்வாய்நகர் மார்பிள் மார்க்கெட் பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுத்த சிலருக்கு குழந்தைகள் விளையாடும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கலந்து வந்துள்ளது. குறிப்பாக, 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த ராமேந்திரா அவாஸ்தி என்பவருக்கு ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டும், 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த சச்சின் என்பவருக்கு ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டும் சேர்ந்து வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து ஆக்சிஸ் வங்கி, ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள நிறுவனத்திடம் விசாரணை நடத்தி, இந்த குற்றத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்தில் இருந்து பெறப்பட்ட கள்ளநோட்டுக்கள் நாளை மாற்றிதரப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக கடந்த 6ஆம் தேதியன்று தேனி மாவட்டத்தில் கள்ளநோட்டுக்களை அச்சடித்து அதனை ஏ.டி.எம் மிஷினில் டெபாசிட் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.,”

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share