எம்.ஐ 9 டீசரை வெளியிட்ட ஷியோமி!

Published On:

| By Balaji

ஷியோமி நிறுவனத்தின் புதிய மொபைலான எம்.ஐ 9 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ படங்களையும், வீடியோவையும் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான லெய் ஜுன் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பகுதியை மட்டுமே படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். பின்புறத்தின் மூன்று கேமராக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. எம்.ஐ 6 ஸ்மார்ட்போனை வடிவமைத்த வடிவமைப்பாளரே இந்த போனையும் வடிவமைத்துள்ளார்.

இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதே நாளில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் அம்சங்கள் பற்றிய விவரங்களும் கசிந்துள்ளன. மூன்று பின்புற கேமராக்களில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா, 3டி மூன்றாம் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சோனி சென்சாருடன் 24 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6+128GB, 8+256GB ஆகிய சேமிப்புத் திறன் வசதிகளுடன் இந்த மொபைல் வெளியாகவுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட இந்த மொபைலில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படவில்லை. 3,500 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த போன் வெளியாகவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share