தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: அதிர்ச்சி கொடுத்த அறிக்கை!

By Minnambalam

|

Published on 28 Jan 2024, 9:00 AM

தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது..

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது 2040-ல் 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநில அளவில் புற்றுநோய் தாக்கத்தில் முதலிடத்தில் உள்ள கேரளாவில் ஒரு லட்சம் பேரில் 135 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. தமிழகத்தில் புற்றுநோயின்  தாக்கம் 2019-ல் 78,000 ஆக இருந்து 2023-ல் 83,000 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களுக்கு வயிற்று புற்றுநோயும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகளவில் காணப்படுகிறது.

ADVERTISEMENT

ஒரு லட்சம்  ஆண்களில் 6.5 பேருக்கு வயிற்று புற்று நோய் ஏற்படுவதாக தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை கூறுகிறது. மேலும் ஒரு லட்சம் ஆண்களில் 6.4 பேருக்கு  நாக்கில் புற்றுநோயும் ஏற்படுகிறது.

பெண்களைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேரில் 27 பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல் ஒரு லட்சம் பெண்களில் 17.7 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், 5.8 பேருக்கு கருமுட்டைபை புற்றுநோயும் 4.1 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோயும், 3.8 பேருக்கு பெருங்குடல் புற்றுநோயும் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

சென்னையை பொறுத்தவரை ஒரு லட்சம் பெண்களில் 52 பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 2001 வரை தமிழகத்தில் பெண்களை அதிகம் தாக்கிய புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருந்து வந்த நிலையில் தற்போது மார்பக புற்றுநோய் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ‘தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வதற்கான திட்டம், பொது சுகாதார துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டமாக ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்’ என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டாலின் தனியாக நிற்க போகிறார்: டிடிவி தினகரன்

உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்!

இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel