என்.டி.பி.சி வேலைவாய்ப்பு 2026: 250 அசிஸ்டன்ட் எக்ஸிக்யூட்டிவ் பணிகள்

By Santhosh Raj Saravanan

|

Published on 28 Apr 2026, 6:02 AM

ntpc assistant executive recruitment 2026 250 posts

மத்திய அரசு பி.எஸ்.யு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (National Thermal Power Corporation – NTPC) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான அசிஸ்டன்ட் எக்ஸிக்யூட்டிவ் ஆப்பரேஷன் (Assistant Executive Operation) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 250 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 7, 2026

இந்த விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் முறையில் (online application process) நடைபெறும்.

ADVERTISEMENT

எந்த பணிக்கு ஆட்சேர்ப்பு: அசிஸ்டன்ட் எக்ஸிக்யூட்டிவ் (Assistant Executive – Operation) – 250 பணியிடங்கள்

இந்த பணிகள் மின்சாரம் உற்பத்தி நிலையங்களில் ஆப்பரேஷன் (operation) மற்றும் மேன்டினன்ஸ் (maintenance) தொடர்பானவை.

ADVERTISEMENT
கல்வித் தகுதி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பி.இ / பி.டெக் (B.E / B.Tech – Mechanical / Electrical Engineering), குறைந்தபட்சம் 40% மார்க்ஸ் (minimum marks), மேலும், குறைந்தது 1 ஆண்டு அனுபவம் (experience), பவர் பிளாண்ட் (power plant) ஆப்பரேஷன் அல்லது மேன்டினன்ஸ் அனுபவம் தேவைப்படுகிறது.

இந்த பணிக்கு மாதம் சுமார் ₹55,000 சம்பளம், மேலும் அலவன்ஸ்கள் (allowances), மருத்துவ வசதி (medical facilities) போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு (age relaxation) வழங்கப்படும்.

இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு, எழுத்துத் தேர்வு (written exam), இன்டர்வியூ (interview), டாக்குமெண்ட் வெரிபிகேஷன் (document verification), மெடிக்கல் டெஸ்ட் (medical test) மூலம் நடைபெறும்.

இந்த வேலை கான்ட்ராக்ட் பேசிஸ் (contract basis), ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் (3 years duration), செயல்திறன் (performance) அடிப்படையில் நீட்டிப்பு (extension) வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.டி.பி.சி அசிஸ்டன்ட் எக்ஸிக்யூட்டிவ் வேலைவாய்ப்பு 2026, அனுபவமுள்ள என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. நண்பர்களே, இந்த சான்ஸை தவறவிடாமல், கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து உங்கள் கரியரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel