அரசியல்வாதிகள் போல் செயல்படும் அமலாக்கத்துறை… டாஸ்மாக் வழக்கு குறித்து என்.ஆர்.இளங்கோ

Published On:

| By Selvam

nr elango says ed behave like politicians

டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (மே 22) இடைக்கால தடை விதித்துள்ளது. nr elango says ed behave like politicians

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளரும் எம்.பி-யுமான என்.ஆர்.இளங்கோ, “டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அழுத்தமாக தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

2014-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை டாஸ்மாக் கடைகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி கணக்கில் வராமல் பணம் வைத்திருந்தால் பணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்வார்கள்.

பின்னர் புலன் விசாரணை நடத்துவார்கள். கைப்பற்றப்பட்ட பணத்திற்கு ஊழியர்கள் தகுந்த விளக்கம் கொடுத்தால், வழக்குகள் முடித்துவைக்கப்படும். தகுந்த விளக்கம் கொடுக்காவிட்டால், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு நடவடிக்கையை தொடரும்.

ADVERTISEMENT

அந்தவகையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 47 வழக்குகளிலும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கம் அளித்ததால் பெரும்பாலான வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. nr elango says ed behave like politicians

அமலாக்கத்துறை ஒரு வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு முதன்மை வழக்கு இருக்க வேண்டும். இதனை predicate offence என்று சொல்வார்கள். ஆனால், இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தாமல், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அமலாக்கத்துறை சோதனை செய்வது முறையற்றது.

ADVERTISEMENT

மேலும், அரசியல்வாதிகள் போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அதைத்தான் திமுகவும், தமிழக அரசும் சொல்லிக்கொண்டு வந்தோம். உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தடை விதித்துள்ளது” என்று தெரிவித்தார். nr elango says ed behave like politicians

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share