அதிமுக-வுடன் இறங்கிபோகும் என்.ஆர்.காங்கிரஸ்

Published On:

| By Balaji

புதுவையில் 30 தொகுதிகளுக்கும் அதிமுக, வேட்பாளர்கள் பட்டியலை 4-ம்தேதி ஜெயலலிதா வெளியிட்டார்.

ஜெயா டிவி-யில் வெளியான அந்தப் பட்டியலை, ஹோட்டல் அண்ணாமலையில் இருந்து பார்த்த ரங்கசாமி, அப்செட் ஆனார். உடனே, எம்.பி. ராதாகிருஷ்ணனிடம், ‘கூட்டணி என்னாச்சு? தனித்து போட்டியிட்டால் அதிமுக-வுக்கும் லாஸ். நமக்கும் லாஸ்’ என்று போனில் கூப்பிட்டுக் வருத்தப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு, ராதாகிருஷ்ணன், அதிமுக தலைமையுடன் பேசி, கடைசியாக அதிமுக-வுக்கு 13 தொகுதி, என்.ஆர்.காங்கிரஸுக்கு 17 தொகுதி என்றும் கூட்டணி மந்திரி சபை அமைப்பது என்றும் பேசப்பட்டதாக சொல்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி, இன்று உற்சாகத்துடன் கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளார். விரைவில், அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சுப முகூர்த்தம் அழைப்பு வெளியாகும் என்கிறார்கள், இரு கட்சியினரும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share