16+14… என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு முடிவு!

Published On:

| By Kavi

புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி  முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது.

ADVERTISEMENT

இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இன்று (மார்ச் 13)  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. 

ADVERTISEMENT

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இதை உறுதி செய்தார். நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்போம். எங்களது மெயின் பார்ட்னர் என்.ஆர்.காங்கிரஸ் என கூறினார்.   

எந்தெந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்த விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share