“மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவம்பர் 1”: ஸ்டாலின்

Published On:

| By Minnambalam Login1

november 1 cm stalin

தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்தான் நவம்பர் 1 என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சித் தலைவர்களான ராமதாஸ், சீமான், வேல்முருகன் ஆகியோர்  ‘நவம்பர் 1 ‘தமிழ்நாடு’ நாளாக அறிவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!

தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று(நவம்பர் 1) பதிவிட்டுள்ளார்.

அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share