அடுத்த நெருக்கடி : ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்ய வந்த நோட்டீஸ்… வாங்க மறுத்த ரவி மோகன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Notice to confiscate Ravi Mohan's luxury bungalow

சென்னையில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்வதற்கு உரிய நோட்டீசை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரவி மோகன் தங்களது படத்தில் நடிக்க முன் பணமாக பெற்ற 6 கோடியை திரும்பிதர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பாபி டச் கோல்டு யுனிவர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 5.90 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் ரவி மோகன் தரப்பில் சொத்து உத்தரவாதம் அளிக்கப்படாதததால் அவரது சொத்துக்களை முடக்க கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து நீதிமன்றம் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினர் வசித்து வந்த பங்களா தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கிய நிலையில் இருவருக்கும் இடையே விவாகரத்து சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக வங்கி தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் வங்கி தரப்பில், எச்சரிக்கை நோட்டீசை கொரியர் மூலம் அனுப்பியதாகவும், ஆனால் கொரியர் நிறுவனத்தின் பெண் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை ரவி மோகன் தரப்பில் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் ரவி மோகனும் அவரது காதலி கெனிஷாவும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share