’தனியாக இல்லை.. அணியாகத்தான் வருவோம்’.. தேர்தல் கூட்டணி குறித்து ‘ஜனநாயகன்’ விழாவில் விஜய் ‘சூசகம்’

Published On:

| By Mathi

Malaysia Vijay

“நாங்கள் எப்போது தனியாக வந்தோம்? அணியாகத்தான் வருவோம்.. இப்போதும் விளக்கம் போதவில்லை என்றால் சஸ்பென்சில்தான் கிக் இருக்கிறது” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ந் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான திரை நட்சத்திரங்கள், தவெக பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

#JanaNayaganAudioLanuch Vijay full speech

இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

ADVERTISEMENT
  • மணல் வீடு கட்ட சினிமாவுக்கு வந்த எனக்கு அரண்மனையையே கொடுத்திருக்காங்க ரசிகர்கள்.
  • எனக்கு ரசிகர்கள் துணையாக நிற்கிறாங்க.. அவங்களுக்காக இனி நான் துணையா நிற்பேன்.
  • 33 ஆண்டுகளாக எனக்கு அவங்க துணையாக நின்றாங்க.. இனி அடுத்த 30,33 ஆண்டுகளுக்கு ரசிகர்களுக்காக நான் நிற்க போறேன்
  • ரசிகர்களுக்காகவே சினிமாவை விட்டே விலகுகிறேன்.
  • நன்றின்னு சொல்லிவிட்டு போகலை.. நன்றிக்கடனை தீர்த்துவிட்டுதான் போவேன்.
  • விஜய் தனியா வருவாரா? அணியா வருவாரா?ன்னு கேட்கிறாங்க..
  • நாங்க எப்ப தனியா வந்தோம்? 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்தோம்..
  • இதுக்கும் விளக்கம் தேவைன்னா சஸ்பென்ஸில்தான் கிக்கே இருக்கு. இவ்வாறு விஜய் பேசினார்

முன்னதாக விஜய் மேடையேறிய போது அவரது ரசிகர்கள், TVK TVK என தவெகவின் பெயரை உரத்து உச்சரித்தனர். அப்போது இங்கே வேண்டாம் என விஜய் அவர்களை சைகையால் தடுத்து நிறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share