உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவுக்கான எரிபொருளை நிறுத்திய நார்வே!

Published On:

| By Raj

Norway stops fuel supply

அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக நார்வே நிறுவனம் அறிவித்திருக்கிறது. Norway stops fuel supply

உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் – உக்ரைன் அதிபா் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

இந்த விவகாரம் உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக அமெரிக்க தரப்பிலிருந்து சிறிய நாடான உக்ரைனுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் அதிபர் டொனால்டு டிரம்ப் நடந்து கொண்டிருப்பதாகவே தெரிந்த நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பினரான நார்வேயை சேர்ந்த எரிபொருள் நிறுவனத்திடமிருந்து அமெரிக்காவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐரோப்பிய தேசமான நார்வேயை சேர்ந்த ‘ஹால்ட்பக் பங்கர்ஸ்’ நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகம் தடைபடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. Norway stops fuel supply

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share