தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வருகிற 29 ஆம் தேதி துவங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வருகிற 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாள் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 29, 30 ஆகிய இரண்டு நாள் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.
மேலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அன்றை நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கலை.ரா
ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி படங்கள் : கெஜ்ரிவால் கோரிக்கை
