விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை!

Published On:

| By Monisha

north east monsoon rain comes to an end

தமிழகத்தில் வரும் ஜனவரி 15 தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதி கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது நிறைவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (ஜனவரி 11) வெளியிடப்பட்ட அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அயலகத் தமிழர் நலத்துறையின் சாதனைகள்: பட்டியலிட்ட உதயநிதி

ஆளுநரை வரவேற்ற துணைவேந்தர் ஜெகன்நாதன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share