நோக்கியா மாடல் போன்களை தயாரிப்பதற்கான லைசன்ஸை வைத்துள்ள ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் கடந்த மாதம் நோக்கியா G42 என்ற 5G ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. அப்போது 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் என்கிற ஒரு ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டுமே வெளியிட்டிருந்தது.
தற்போது நோக்கியா G42-ன் மற்றுமொரு வேரியண்ட் ஆன 8GB ரேம் 256GB ஸ்டோரேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வேரியண்ட் ரூ.16,999 என்ற விலையில் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக வெளியான 6GB ரேம் 128GB ஸ்டோரேஜின் விலை ரூ.11,999 ஆகும்.
கிரே, பர்ப்பிள், பிங்க் போன்ற வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் போனை இன்று முதல் (அக்டோபர் 18) Nokia.com, ஆன்லைன் தளங்கள் மற்றும் ரீடைல் கடைகளிலும் வாங்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நோக்கியா G42 ஸ்மார்ட் போனை வாங்குபவர்களுக்கு ஒரு ப்ளூடூத் ஹெட்போன் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் மதிப்பு ரூ.999.
இந்த நோக்கியா G42 ஸ்மார்ட் போனுக்கு 3 வருட செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 2 வருட ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படும் என்றும் HMD குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
6.56 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி 20W ஃபாஸ்டு சார்ஜிங் வசதி என ஒரு பக்காவான பேக்கேஜ் ஆக வருகிறது.
193.8 கிராம் எடை கொண்ட நோக்கியா G42 ஸ்மார்ட் போன் ஆனது Octo-Core Qualcom Snapdragon ப்ராசசர் மூலமாக இயங்குகிறது.
-பவித்ரா பலராமன்
சசிகுமார் படத்திற்காக ஈசிஆரில் கிராமம் செட்!
’ஏய்… சத்யா… யார் மேல கை வைக்கிறே?’ எடப்பாடி கண் முன்னே மோதிக் கொண்ட மா.செ.க்கள்!
தினமும் முதல் டியூட்டி இதுதான்: கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை!
