சென்னைக்கு ஆபத்து இல்லை.. டிட்வா புயல் வலுவிழந்தது- ரெட் அலர்ட் வாபஸ்!

By Mathi

|

Published on 30 Nov 2025, 10:11 PM

Ditwah Final

இலங்கையை புரட்டிப் போட்டு சென்னைக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வந்த டிட்வா புயல் வங்க கடலிலேயே வலுவிழந்தது; இதனால் சென்னைக்கான ஆபத்து நீங்கியது; இன்று அதீத கனமழை பெய்யக் கூடும் என விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், வடக்கு மாகாண நிலப்பரப்புக்குள் ஊடுருவி தமிழ்நாட்டை நோக்கி பயணித்தது. இலங்கையில் பேரிழப்பை ஏற்படுத்திய டிட்வா புயல் வட தமிழ்நாட்டிலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற அச்சம் இருந்து வந்தது.

ADVERTISEMENT

வட தமிழ்நாடு, புதுச்சேரி, காவிரி டெல்டா மற்றும் காரைக்காலில் கனமழையும் இடைவிடாது கொட்டியது. இந்த நிலையில் சென்னை நோக்கி வந்த டிட்வா புயல், வங்க கடலிலேயே வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் சென்னை உட்பட தமிழக பகுதிகளுக்கான பேராபத்து நீங்கியது; அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. அதேநேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel