பாகிஸ்தானுக்கு நிம்மதி இல்லை- பயங்கரவாத தாக்குதல் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான யுத்தம்- மத்திய அரசு முடிவு

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவில் இனி எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது இந்தியாவுக்கு எதிரான போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அவரது இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இனி இந்தியாவில் நடத்தப்படும் எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலும் இந்தியாவுக்கு எதிரான போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களுக்கு உரிய முறையில் பதிலடி தருவது எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிஎஸ்எப் வீரர்கள் 8 பேர் படுகாயம்

இதனிடையே ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்புரா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை- BSF வீரர்கள் 8 பேர் படுகாயமடைந்துள்னர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share